கண்ணையா (ெபாதுச்செயலாளர், எஸ்ஆர்எம்யூ): உள்துறை அமைச்சரை ஜூலை 6ம் தேதி போராட்டக்குழு நிர்வாகிகள் சந்தித்தோம். அப்போது ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி குறைந்தபட்ச அடிப்படை
சம்பள உயர்வு நிர்ணயம் செய்வது, ஊதிய நிர்ணய காரணியை உயர்த்துவது குறித்து உயர்மட்ட செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். அதன் அடிப்படையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் தகுந்த மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும்
என்று உறுதி அளிக்கப்பட்டது. எனவே அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை நான் ஏற்கனவே அறிவித்தபடி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளோம். அதேபோல், படிகள் குறித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியமாக மாற்றுவது குறித்தும் வலியுறுத்தினோம்.
சூர்யபிரகாஷ் (செயல் பொதுச்செயலாளர், எஸ்ஆர்ஈஎஸ்): எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்மட்டக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அந்த குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் திருத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதனை நிதி அமைச்சகமும் ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை 4 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளோம்.
அபிமன்னன் (கோட்டத் தலைவர், டிஆர்ஈயூ): எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய உயர் மட்டக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக்குழு 4 மாதத்தில் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். அவை எப்படி இருக்கும், அதனை மத்திய அரசு அமல்படுத்துமா என்பது 4 மாதத்திற்கு பிறகுதான் தெரியும். அதனால் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...