Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.
இதற்காக தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தப்பட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறுவதும், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம்.  
இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் திருண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், கடந்த கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் நடப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் கடுமையான விதிமுறைகள் அரசாணையாக வெளியிடபட்டுள்ளது.




4 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Will u pls get and post the G.O soon?

    ReplyDelete
  3. கற்றல் கற்பித்தல் பணி நிகழக்கூடிய மிக. முக்கியமான காலம் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் ஆகும்

    அண்மைக் காலமாக
    இம்மூன்று மாதங்களும், ஆசிரியர்
    கலந்தாய்வு , பணி நிரவல்,
    பதவி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு, விவாதங்கள், ஊகங்கள், ஆருடங்களினால்
    பள்ளிச் சூழல் வெகுவாக பாதிக்கிறது.
    திட்டமிடலிலும் சிரம்ம் உள்ளது
    கற்றல் கற்பித்தலில்,ஆசிரியர் மன நலம், ஆர்வம், ஊக்கம்,ஆகியன அவர்தம்செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது.எனவே,
    மாணவர்களின் நலன் கருதி கலந்தாய்வுகள்உடன் நடத்தப்பட வேண்டும்
    என்பது அனைவரின் எதிர்பாப்பாக உள்ளது.

    ReplyDelete
  4. where is the G.O.? Still no G.O. published!.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive