ஏர்செல் நிறுவனத்தின் சார்பில் ஸ்வச் வித்யாலய திட்டத்தின் கீழ் தமிழகம்,
புதுச்சேரியில் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் ஏர்செல் நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்
தலைவர் பிருந்தா மல்ஹோத்ரா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஏர்செல் நிறுவனம் சார்பில் பல்வேறு கல்விப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி, ஏர்செல்
நிறுவனம் சார்பில் "ஸ்வச் வித்யாலய' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு முழுவதும் தமிழகம், புதுச்சேரியில்
உள்ள கழிப்பறை, சுகாதார வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ரோட்டரி
சங்கம் முக்கிய உதவி புரிந்தது. அதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் 50
அரசுப் பள்ளிகளில் ரூ.1 கோடி மதிப்பிலான கழிப்பறைகள் கட்டப்பட்டன.
இதில், 33 பள்ளிகளில் சென்னையில், 7 பள்ளிகளில் கோவையிலும், 10 பள்ளிகளில்
புதுச்சேரியிலும் உள்ளன. இதில் சில பள்ளிகளில் தண்ணீர் வசதிக்காக ஆழ்குழாய்
கிணறும் தோண்டப்பட்டது. மேலும் இந்தக் கழிப்பறைகளில் கைகழுவ சோப்புகள்,
மாணவிகளுக்கு நாப்கின் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும்
இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும். சென்னை
சேத்துப்பட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்தத் திட்டத்
துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும்
மாணவர்கள் இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...