கனடாவைச் சேர்ந்த டேட்டா விண்ட் நிறுவனம் 4ஜி டேப் லெட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மோர் ஜிமேக்ஸ் பிராண்ட் 4ஜி 7 என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த டேப்லெட்டின் விலை ரூ.5,999 ஆகும்.
7 அங்குல திரை, 3
மெகா பிக்ஸெல் கேமிரா, குவாட்கோர் கார்டக்ஸ் ஏ7 பிராசஸர், ஆண்ட் ராய்டு 5.1
இயங்குதளம் ஆகியவற் றோடு ஒரு ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி பிளாஷ் நினைவக
வசதியோடு இது வெளிவந்துள்ளது.
வைஃபை ஹாட்ஸ்பாட், வைஃபை டைரக்ட், புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி கள்
உள்ளன. அனைத்து டேட்டா விண்ட் சாதனங்ளிலும் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸின்
எல்லையில்லா இணைய வசதி கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கிடைக்கிறது. வழக்கமான
குரல் வழி அழைப்பு செயல் திறனுடன் இது வெளிவந்துள்ளது.
மேலும் டேட்டாவிண்ட் நிறுவனத் தின் இணையதள டெலிவரி வசதி உள்ளது. இது 2ஜி
நெட்வொர்க் கிலும் செயலாற்றும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...