சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில் புதன்கிழமை தொடங்கியது.
எவ்வித நன்கொடை இன்றி தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை நடைபெற்றதால் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2016-17 ஆண்டிற்கான மருத்துவம் (MBBS), பல்மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20-ம் தேதி வரை பெறப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர 4906 விண்ணப்பங்களும், பல் மருத்துவம் படிப்பில் சேர 1079 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அவற்றில் 276 மருத்துவ விண்ணப்பங்களும், 52 பல் மருத்துவ விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.மருத்துவப்படிப்புக்கு 150 இடங்களும், பல மருத்துவ படிப்பிற்கு 80 இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படிப்புகளுக்கான சம்வாய்ப்பு எண்கள் (RandonNumber) கடந்த ஜூன் 27-ம் தேதியும், தரவரிசை பட்டியல் (Rank List) ஜூலை 1-ம் தேதியும் வெளியிடப்பட்டது. பின்னர் முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழக வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எம்பிபிஎஸ் படிப்பிற்கானமுதல் கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தரவரிசை (Rank List) அடிப்படையில் கலந்தாய்விற்கு மொத்தம் 929 மாணவ, மாணவியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள் (Differentaly Abled Candidates)- 14 பேர்விண்ணப்பித்திருந்தனர். இதில் 7 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில் 7 பேரும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சோதனையில் உரிய தகுதியில்லாததால் நிராகரிக்கப்பட்டனர்.
கலந்தாய்வில் பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று எம்பிபிஎஸ் படிப்பிற்கு அனுமதி சேர்க்கை பெற்றனர். அந்த மாணவ, மாணவியர்கள் விபரம்: தென்காசி தாலுக்கா பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாணவி ஜூடி ஸ்டாலின் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1172. இவர் 197.75 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தில் அனுமதி சேர்க்கை பெற்றார்.இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற குடியாத்தத்தை சேர்ந்த மாணவி என்.ஆர்.ரேகா பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1165. இவர் 197.75 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று இரண்டாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார். மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி ஜி.சுபத்ரா பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 1168. இவர் 197.75 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று மூன்றாவதாக அனுமதி சேர்க்கை ஆணை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றவர்கள் ஜூலை 11-ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை கட்சி அனுமதி சேர்க்கை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.எம்பிபிஎஸ் ஆண்டு கல்வி கட்டணம் ரூ.5,54,370 ஆகும். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கை ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், சிண்டிகேட் உறுப்பினர்கள் கானூர் பாலசுந்தரம், பூங்குன்றம், கே.கதிரேசன், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர்டாக்டர் என்.சிதம்பரம், பல்மருத்துவப்புல முதல்வர் முனைவர் வி.கிருஷ்ணன், பொறியியல் புல முதல்வர் சி.ஆண்டனிஜெயசேகர், மாணவர் சேர்க்கை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் முனைவர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலக மேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவ, மாணவியர்களை வரவேற்றும், தமிழஅரசு இடஒதுக்கீட்டின் படி முற்றிலும் தகுதி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், நன்கொடை கிடையாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 8-ம் தேதி பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...