Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் : ஜாதி மறுப்புதிருமணம் செய்தோர் கோரிக்கை

'ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு ஜாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, கல்வித்தகுதி அடிப்படையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக அரசு பணி வழங்க வேண்டும்; தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக, சமத்துவபுரத்தை உருவாக்க வேண்டும். மாநகராட்சிகளில், வீட்டு வசதி வாரியம் உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடு வழங்க வேண்டும்.ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு, பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் குறிப்பிடாமல், தமிழர் அல்லது இந்தியர் என குறிப்பிட வேண்டும். கலப்பு திருமணம் என்பதை, 'ஜாதி மறுப்பு திருமணம்' என, அரசு குறிப்பேட்டில் குறிப்பிடவேண்டும்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி கழகமான, 'தாட்கோ' மூலம், 10 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு வேலைக்கான வயது வரம்பு, 45 வயது என, நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.




2 Comments:

  1. Thanks for your efforts, it became a great success in feature, by T.MATHIVANAN from Trichy.

    ReplyDelete
  2. Thanks for your efforts, it became a great success in feature, by T.MATHIVANAN from Trichy.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive