தேசிய சிறார் விருதுக்கு தகுதியுடையவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் இந்த ஆண்டுக்கான தேசிய சிறார் விருது வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 5 முதல் 18 வயதுக்கு மிகாத இந்திய குடியுரிமையுடைய சிறுவர்கள், விளையாட்டு, இசை, கலை, பண்பாடு, சமூக சேவை மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் மைய குழுவினரால் திறமையானவர் என அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கல்வியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏதேனும் ஒரு பாடத்தில் முதலிடம் வகித்திருந்தது போல் தேசிய அளவில் சாதனை புரிந்திருக்க வேண்டும். ஏதேனும் துறையில் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில் நுட்ப வரைபடம் கொண்டிருந்தாலும், இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த தகுதியுடைய சிறார்கள் விண்ணப்பங்களை ராஜாஜி சாலையில் உள்ள சிங்கார வேலர் மாளிகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக 8 வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று இம்மாதம் 31-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...