சென்னை அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், அனைத்து பாடப்பிரிவுகளும்
நிரம்பிவிட்டன. ஒரு வாரத்தில், 20 ஆயிரம் பேர், பி.இ., - பி.டெக்.,
பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்ஜி., முதலாம் ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், ஜூன், 27ல், அண்ணா பல்கலையில் துவங்கியது.
இதில், முதல் நாளில் இருந்தே அண்ணா பல்கலையின், மூன்று கல்லுாரிகளில் சேர மாணவர் போட்டி போட்டனர். முதலில், இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' மற்றும் கம்யூ., சயின்ஸ் துறைக்கு அதிக மாணவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். நேற்று மாலை நிலவரப்படி, அண்ணா பல்கலையின் பிரிவுகளான கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி போன்றவற்றில், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் படிப்புகள் நிரம்பிவிட்டன. பொது கவுன்சிலிங் துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், 30 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு, அவற்றில், 22 ஆயிரம் பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...