பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கற்றல் கையேடு குறித்து, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு புளு பிரிண்ட் அடிப்படையில் கடந்த ஆண்டு கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்.சி.இ.ஆர்.டி.) தயாரித்தது.இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கான கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டு முன்னதாகவே வழங்கப்படுதிறது.
இதுகுறித்து எஸ்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் ராமேஸ்வரமுருகன்கூறியதாவது:-
மழை-வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தக் கையேட்டுடன், மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டது. இது தேர்ச்சியில்பின்தங்கியோர் சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவியது. தற்போது நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக சிறப்புக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெறவும், சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண் பெறும் வகையிலும், நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம்பெறவும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது.
"டயட்' மூலம் பயிற்சி:
முன்னதாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, முக்கிய பாடங்களுக்கு அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்றுநர்களுக்கானபயிற்சி ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் முழுவதும் 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் இந்த ஆசிரியர்கள் பயிற்சிஅளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கற்றல்கையேடு வழங்கப்படும். அதுபோல் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க மன வள ஆலோசனைகளும் விரைவில் வழங்கப்படும்என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...