சென்னை, தமிழகத்தில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்தமாதம்(ஆகஸ்டு)
நடக்கிறது என்று ராணுவ பிரிகேடியர் டால்வி அறிவித்துள்ளார்.
மண்டல
வாரியாகஇதுகுறித்து நிருபர்களுக்கு, இந்திய ராணுவத்தின் தமிழ்நாடு,
ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் ஆள் சேர்ப்பு மண்டல
தலைமையகத்தின் துணை இயக்குனர் பிரிகேடியர் டால்வி அளித்த பேட்டி
வருமாறு:-ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மண்டலத்தில் இந்த முகாம்கள்
நடத்தப்படவுள்ளன.சென்னை மண்டலத்தில் வரும் சென்னை, காஞ்சீபுரம்,
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்
மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்காக திருவண்ணாமலையில் ஆகஸ்டு 19-ந் தேதி
முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்.ராமநாதபுரம்-மதுரைதிருச்சி மண்டலத்துக்கு
உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் மாவட்ட மக்களுக்கான
முகாம், ராமநாதபுரத்தில் ஆகஸ்டு 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை
நடக்கிறது.கோவை மண்டலம், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி,
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான
முகாம், மதுரையில் நவம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறும்.2
ஆயிரம் பணியிடங்கள் காலிராணுவத்தில் இளைஞர்கள் சேர்வது தமிழகத்தில் மிகவும்
குறைவாக உள்ளது. எனவே தற்போது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இதற்கான
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ராணுவ வீரர் பணிக்கு (ஜவான்) ரூ.35
ஆயிரம் வரை மாதச் சம்பளம் உண்டு. மற்ற பணிகளுக்கு, ரூ.52 ஆயிரம் வரை
சம்பளம் கிடைக்கும்.ஆயிரத்து 600 ராணுவப் பணியிடங்களும், 400 தொழில்நுட்பப்
பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்கு இணையதளம் (
ழீஷீ-வீ-ஸீ-வீ-ஸீ-பீ-வீ-ணீ-ஸீ-ணீ-க்ஷீ-னீஹ்.ஸீவீநீ.வீஸீ ) மூலமாகத்தான்
விண்ணப்பிக்க வேண்டும். முகாம் தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பு வரை
விண்ணப்பிக்கலாம்.தகுதிகள்விண்ணப்பதாரருக்கு தகுதி இருக்கும் பட்சத்தில்
அவருக்கு இ-மெயில் மூலமாக தகவல் அளிக்கப்படும். பின்னர் உடல் தகுதித்தேர்வு
நடத்தப்பட்டு, 1.6 கி.மீ. தூரத்தை 5.30 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பது; 10
முறை புல் அப்ஸ் எடுப்பது ஆகிய தேர்வில் பங்கேற்று தகுதி அடைய வேண்டும்.
இதில் 100 மார்க் உண்டு.ராணுவத்தில் சேர பத்தாம் வகுப்பில் 45 சதவீத மார்க்
பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்று வந்திருந்தால் உடலில்
பாதிப்பு ஏற்படாது. பின்னர் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுத்துத்தேர்வு
நடக்கும். இந்தத் தேர்வை தமிழ் போன்ற பிராந்திய மொழிகளிலும் நடத்த
பாதுகாப்புத் துறையிடம் கேட்டிருக்கிறோம்.ராணுவத்தில் சேர இடைத்தரகர்களை
நம்பி பணம் கொடுக்கவேண்டாம். ராணுவத்தில் ஆள் சேர்க்கும் நடவடிக்கை
அனைத்தும் வெளிப்படையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறி னார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...