விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன.
இந்த இடங்களில்
மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற
உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை,சாத்தூர் மற்றும்
விருதுநகர் ஆகிய இடங்களில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன.
இதில் பிட்டர், டர்னர் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. சூலக்கரை, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் உள்ளன.அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்க 1709 பேர் இணைய தளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கானசேர்க்கைக்கான கலந்தாய்வு விருதுநகரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கடந்த ஜூலை 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 522 இடங்களில் 431 பேரும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள 302 இடங்களில் 204 மாணவ, மாணவிகளும் சேர்ந்துள்ளனர். 189 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது. சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பப்படும் என விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செந்தில்வேலன் கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...