சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture),
பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய படிப்பில் சேருவதற்கான
தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு
வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில்
நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc.
Agriculture) படிப்புக்கு 11595 விண்ணப்பங்களும், தோட்டக்கலை(B.Sc.
Horticulture) படிப்புக்கு 601 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. அவற்றில் 711
இளநிலை அறிவியல் வேளாண்மை விண்ணப்பங்களும், 35 தோட்டக்கலை விண்ணப்பங்களும்
நிராகரிக்கப்பட்டன.இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture)
தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “சமவாய்ப்பு” எண்கள்
(Random Number) கடந்த ஜூலை 13-ம் தேதி வெளியிடப்பட்டது.
இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) படிப்புகளுக்கு “தரவரிசை பட்டியல்” (Rank List) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது தரவரிசை (Rank)யை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள், மேல் நிலை (HSC) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார்செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின்விதிப்படி ஒதுக்கப்படும். இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 23, 25 மற்றும் 26 தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும்.கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள்பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். குறுந்தகவல் (SMS) மூலமாகவும் அனுப்பப்படும்.
மேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in. பார்க்கவும். தொடர்புக்கு auadmission2016@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம் என பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...