மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் சுவர்களில் மாணவர்களால் வரையப்பட உள்ள சுற்றுச்சூழல்ஓவியங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கமிஷனர் சந்தீப் நந்துாரி, நகரின் முக்கிய
இடங்களில் ஓவியங்கள் வரைந்து அழகாக்கும் திட்டத்தை தொடர்ந்து
அறிமுகப்படுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக, சுற்றுச்சூழல் தொடர்பான
சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் 'சொராப்டமைஸ்ட் இன்டர்நேஷனல் மதுரை' அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து இப்பணியை தொடர உள்ளது.
மாணவர்களுக்கு அழைப்பு:
இத்திட்டம் துாய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும். இதில்சுற்றுச்சூழல்
மேம்பாடு தொடர்பாக மாணவர்களிடம் உள்ள படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும்
வகையில் பள்ளி, கல்லுாரி அளவில் பல தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் திறந்த
வெளியில் குப்பைகள் போடுதல், மலம் கழித்தல்,
பிளாஸ்டிக் எரித்தல், துாய்மையான பகுதிகளை மாசுபடுத்துதல், நீர்நிலைகளை
அழித்தல் போன்றவை நிகழாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை
வரைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் ஓவியங்கள்:
சொராப்டமைஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் அனிதா
ராஜராஜன் கூறியதாவது: அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் இந்த
தலைப்புகள் அறிமுகப்படுத்தி கல்வி நிலையங்கள் சார்பில் போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள்எதிர்பார்க்கிறோம். இதற்கான கடைசி நாள் ஜூலை 29. இதில் 220 ஓவியங்களை தேர்வு செய்து மாநகராட்சிக்கு அளிக்க உள்ளோம், என்றார்.
மதுரையின் புதிய அடையாளம்:
நகர்நல அலுவலர்யசோதாமணி கூறியதாவது: மாணவர்கள்
பேப்பரில் வரையும் சிறந்த படங்கள் தேர்வு செய்த பின், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள சுவற்றில் வரையப்படும். சுவரில் வரைய அனுபவ
மில்லாத மாணவர்களின் ஓவியங்களை ஆசிரியர்கள் வரைந்து கொடுக்கலாம்.சிறப்பாக ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கும் மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்படும், என்றார்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சுவர் முழுவதும் அழகாக மாறஉள்ளது. நீண்ட இச்சுவர்
மதுரையின் புதிய அடையாளமாகவும்,
புதுப்பொலிவாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின்
கலைத்திறனை வெளியுலகிற்கு வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...