தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான
மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து
5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு,
இதில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு மீண்டும் அவர்களது தேர்வுத்தாள்கள் மே மாத கடைசியில்
திருத்தப்பட்டு திருத்திய மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
திருத்திய மதிப்பெண்கள் என்பது ஏற்கெனவே பொதுத் தேர்வில் கிடைத்த
மதிப்பெண்களை விட 10 முதல் அதிகபட்சம் 20 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ,
அல்லது குறைவாகவோ இருப்பது வழக்கமாகும்.
ஆனால், குறிப்பிட்ட மாவட்டங்களில் 25 மதிப்பெண்கள் முதல் 75 மதிப்பெண்கள் வரை வேறுபாடு இருந்தது தெரியவந்தது.
மறுமதிப்பீட்டில் இதுபோல அதிக வித்தியாசத்தில் மதிப்பெண்கள் வேறுபடுவது
அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுகூட்டலின் தேர்வுத்தாள்
நகலைப் பெற்ற மாணவர்கள் தரப்பில், இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வித்துறை
இயக்குநருக்குப் புகார்கள் சென்றன. அதன்படி நடைபெற்ற விசாரணையில்
திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்
திருத்தப்பட்ட மறுகூட்டல் தேர்வுத்தாள்களில் மதிப்பெண் முரண்பாடு இருப்பது
கண்டறியப்பட்டது.
இதுபற்றி புகார் எழுந்த மாவட்டங்களைச் சேர்ந்த மறுகூட்டல் தேர்வுத்தாள்
திருத்திய மையங்களின் உதவி தேர்வர்கள், கண்காணிக்கும் ஆய்வாளர்
பொறுப்பிலிருந்தவர்கள் என 25-க்கும் மேற்பட்டவர்களை சென்னைக்கு,
விசாரணைக்காக வருமாறு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...