முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு
தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ராக்கெட்டுகள், இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ், ஆகாஷ்,
பிருத்வி, தனுஷ் ஏவுகணை மாதிரிகள், மிராஜ், மிக்–2, தேஜஸ் ஆகிய போர்
விமானங்களின் மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை
பொதுமக்கள் வருகிற 1–ந்தேதி வரை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.
மேலும், கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக
அருங்காட்சியகத்தில், அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள், அவர் எழுதிய
புத்தகங்கள், அவர் உபயோகப்படுத்திய பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...