மிக வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் போனை உருவாக்கி இருப்பதாக, 'ஓப்போ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி
குறிப்பில் கூறியிருப்பதாவது: மொபைல் போனின் பேட்டரி நீடிக்கும் திறன்,
அந்த போன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் உபயோகிப்பாளரை பொறுத்து
மாறுபடும். ஒரே ரக போனை பயன் படுத்தும் வெவ்வேறு நபருக்கும் இந்த கால அளவு
மாறுபடும்.
தற்போது, 'பாஸ்ட் சார்ஜிங்' எனும் வேகமாக சார்ஜ் ஆகும்
தொழில்நுட்பம், பரவி வருகிறது.'ஓப்போ எப்1' மொபைல்போனில், 'வி.ஓ.ஓ.சி.,
பிளாஷ் சார்ஜ்' எனும் அத்தகைய தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த போனின்
சார்ஜ் ஆகும் வேகத்தை, 'ஆப்பிள் ஐபோன் 6எஸ், கூகுள் நெக்சஸ் 6பி' மற்றும்,
'சாம்சங் கேலக்ஸி எஸ்7' ஆகிய மாடல்களுடன் ஒப்பிட்டு பார்த்தோம். 45 நிமிட
சோதனையில், 'ஐபோன் 6' பேட்டரி, 53 சதவீதம்; 'கூகுள் நெக்சஸ் 6பி' மற்றும்
'சாம்சங் கேலக்ஸி எஸ் 7' ஆகியவற்றின் பேட்டரி ஆகியவை, 65 சதவீதம் வரை
சார்ஜ் ஆகின. ஆனால், ஓப்போ எப்1, 92 சதவீதம், சார்ஜ் ஆகியிருந்தது.
இதற்கான, 'ஆப்'களை, வைத்து சோதித்ததில் இது உறுதியாயிற்று. அவசரமாக
வெளியில் செல்லும்போது சிறிது நேரம், சார்ஜ் செய்தாலும், பேட்டரியின் அளவு
கூடுதல் நேரம் நீடிக்கும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...