திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19-இல் தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ராணுவத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யும் வகையிலான
இந்த முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோரும், புதுச்சேரியைச் சேர்ந்தோரும்
பங்கேற்கலாம்.
தங்களது பெயர் விவரங்களை http:joinindianarmy.nic.in என்ற இணையதள
முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை, இந்திய ராணுவத்தின்
அதிகாரபூர்வ ""யூ- டியூப்பில்'' பார்வையிடலாம் என அரசு சார்பில்
வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...