சத்துணவுத் திட்டத்தின்கீழ் 55 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள்,திருநங்கைகள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோர்
பயன்பெறும் வகையில் சமூக நலத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறது.
திருமண உதவித் திட்டம்: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டதாரி
ஏழைப் பெண்கள் பயன்பெற வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம் தற்போது 8 கிராமாக
உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.703 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது.
தொட்டில் குழந்தை திட்டம்: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில்
குழந்தைத் திட்டம் ஆகியவற்றுக்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.141 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவுத் திட்டம்: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 55 லட்சம்
குழந்தைகளுக்கு சத்துமிக்க கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத்
திட்டத்துக்காக ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர் உதவித்தொகை: முதியோர்கள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதற்காக, நடப்பு நிதியாண்டில் ரூ.3,820 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக
நலத்துறைக்கென, திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டின்படி ரூ.4,512 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...