தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை
முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக என்.கே.செந்தாரைக்கண்ணன்
நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.வரதராஜு நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஜே.மகேஷ், தேனி மாவட்ட எஸ்.பியாக
வி.பாஸ்கரன், திருச்சி நகர துணை கமிஷனராக (சட்டம் ஒழுங்கு) ஏ.மயில்வாகனன்,
சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஜி. என் சேஷசாயி சென்னை தலைமையிடத்துக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். காலியாக இருந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
மற்றும் ஐ.ஜி. பதவிக்கு அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உளவுப்பிரிவு கூடுதல் ஆணையராக பி.தாமரைக் கண்ணன்,
சென்னை பூக்கடை துணை கமிஷனராக ஆர்.சக்திவேல், திருச்சி எஸ்.பியாக
டி.செந்தில்குமார், சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக ஆர்.சுதாகர், சென்னை
புளியந்தோப்பு துணை கமிஷனராக எஸ்.செல்வக்குமார், சென்னை போக்குவரத்து துணை
ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...