வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை
கண்டித்து, வரும், 12 மற்றும் 13ம் தேதிகளில், தேசிய அளவில், வங்கி
ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்
சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: இந்தியாவின்
பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியுடன், திருவாங்கூர், ஐதராபாத், பட்டியாலா,
பிகானிர், ஜெய்ப்பூர் ஆகிய, ஐந்து துணை ஸ்டேட் வங்கிகளை இணைக்க, மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து, வரும் 12ம் தேதி, ஐந்து துணை
வங்கிகளில் நாடு முழுவதும் பணிபுரியும், 45 ஆயிரம் ஊழியர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கிகள் இணைப்பு, ஐ.டி.பி.ஐ., வங்கி
தனியார்மயம், பெரு முதலாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்காதது போன்றவற்றை
கண்டித்து, 13ம் தேதி, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய
வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு
முழுவதும், மூன்று லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில், ஸ்டேட் வங்கி ஊழியர்கள்
பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க துணை
பொதுச் செயலர் செந்தில் கூறுகையில், ''எங்கள் வங்கியுடன், மற்ற வங்கிகள்
இணைப்பை கண்டித்து, அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில், ஜூலை, 29ல்
நடக்கும் போராட்டத்தில், நாங்களும் பங்கேற்கிறோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...