தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு
அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக.10 ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள
பள்ளி சத்துணவு மையங்களில் 31 சத்துணவு அமைப்பாளர், 155 சமையல் உதவியாளர்
காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. காலிப்
பணியிடங்களுக்கான இனச் சுழற்சி விவரம் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய
அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில்
வெளியிடப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப்
பிரிவினர் மற்றும் ஆதி திராவிடர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். 1.7.2016 அன்று 21 முதல் 40 வயதுக்குள், விதவைகள் மற்றும்
கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். 18 முதல் 40
வயதுக்குள்பட்டு இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 5 ஆம்
வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பழங்குடியினருக்கு எழுத, படிக்கத்
தெரிந்திருக்க வேண்டும். பணியிடத்துக்கும் விண்ணப்பதாரின்
குடியிருப்புக்கும் 3 கி.மீ. தூரத்துக்குள்பட்டு இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வி, வயது, இருப்பிடம், ஜாதி மற்றும்
முன்னுரிமை சான்றிதழ் நகல்களுடன் ஆக.10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்
சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில்
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...