விழுப்புரத்தில் அரசுப்பள்ளி அருகே மாணவர்களுக்கு போதையை உண்டாக்கக்கூடிய
100 கிலோ போதை சாக்லெட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன்
கடந்த மாதம் பள்ளி அருகே உள்ள கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிட்டுள்ளான்.
அதன் பின் சில மணி நேரத்தில் மயங்கி விழுந்தான்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னும் சுயநினைவு திரும்பாத அவனுக்கு
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில்
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகேயுள்ள கடைகளில் ஆய்வு கொண்டு சாக்லெட்களை
பரிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போதை சாக்லெட்கள்
விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது.


இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு கடந்த 8ம் தேதி சேலம், கோவை, நெல்லை,
தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாய் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த போதை சாக்லெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று விழுப்புரம் மருதூர் அரசுப்பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதையை உண்டாக்கக்கூடிய சாக்லெட் விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட கடைகளிலிருந்து 100 கிலோ போதை சாக்லெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று விழுப்புரம் மருதூர் அரசுப்பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதையை உண்டாக்கக்கூடிய சாக்லெட் விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட கடைகளிலிருந்து 100 கிலோ போதை சாக்லெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே போல் அதிகளவு நிறமேற்றப்பட்ட திண்பண்டங்கள், சிகரெட் மிட்டாய்கள் 200
கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி குளத்து மேட்டுத் தெருவில்
உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கிலோ போதை சாக்லெட்டுகள் சிக்கின.
இதுபோல் பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர்
வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று பெரம்பலூர் துறையூர்
சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் முன்புறமுள்ள
கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள
பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக 20க்கும்
மேற்பட்ட போதை கலந்துள்ள சீனா சாக்லெட் பாக்கெட்டுகள், காலாவதியான 10க்கும்
மேற்பட்ட சாக்லெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...