Home »
» ரூ.10 ஆயிரத்திற்கு எல்இடி டிவி... 'ஃப்ரீடம் 251' ஸ்மார்ட் போனை அறிவித்த நிறுவனம் அறிமுகம்!
உலகிலேயே மிக குறைவான விலைக்கு செல்போனை விற்பனை செய்வதாக
கூறி, ரூ. 251 க்கு செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம்,
தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்துவதாக
அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், 'ஃப்ரீடம் 251' என்ற பெயரில்
ஸ்மார்ட் போனை டெல்லியைசேர்ந்த ரிங்கிங்பெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் புக் செய்தனர்.ஒரே நாளில் 7.5
கோடியை சம்பாதித்த அந்த நிறுவனத்தால், சொன்னது போல வாடிக்கையாளர்களுக்கு
ஸ்மார்ட் போன்களை வழங்க இயலவில்லை. தற்போது, ஜூன் மாதம் 8ம் தேதிக்குள்
அனைத்து வாடிக்கையளர்களுக்கும் ஸ்மார்ட் போன்களை வழங்கி விடுவதாக ரிங்கிங்
பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கிடையே அதே ரிங்கிங்பெல் நிறுவனம்,
குறைந்த விலைக்கு எல்இடி டிவியை இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்பெயர் 'ஃப்ரீடம் ஹெச்டி எல்ஈடி டி.வி.' ஆகும். 32 இன்ச் கொண்ட இந்த
டிவியின் விலைரூ.9, 990 தான். சுமார் ஒரு லட்சம் டிவிகளை அது
தயாரித்துள்ளதாம். அதுபோல் புதிய ரக ஸ்மார்ட் போன்களையும் ரிங்கிங்பெல்
அறிமுப்படுத்துகிறது.
இது குறித்து ரிங்கிங்பெல் நிர்வாக இயக்குநர் மோகித் கோயல்
கூறுகையில், " ஜூலை 25 ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங்தொடங்கும். ஆகஸ்ட் 1
ம் தேதி டெலிவரி செய்யப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...