நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள்
படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்
சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு
அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப
அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண்
சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வரவேண்டும்.
ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி ஆக. 1 ஆம்
தேதி வரை அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15
நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு
தேதியாக வழங்கப்படும். மேலும்,
https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்
துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய
விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் எனக் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...