ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத்
தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான
இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.
கடந்த மே மாதம் நடந்த,
ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், ராஜஸ்தான் மாணவர்கள் அதிக
இடங்களை பிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும், பயிற்சி மைய
மாணவர்களும் முன்னணியில் வந்துள்ளனர். இந்த கோட்டா நகர பயிற்சி மையங்கள்,
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, நுழைவுத் தேர்வில் ஆதிக்கம் செலுத்தி
வருகின்றன.
மும்பை மண்டலத்தில், 8,810 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென் மாநிலங்களை
உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 6,702 பேர்; புதுடில்லி, 5,941; மேற்கு
வங்கம், கரக்பூர், 4,560; கான்பூர், 4,443; ரூர்கி, 3,642; கவுஹாத்தி,
2,468 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலுங்கானாவில், 2,515 பேர் அதிகபட்சமாக
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆந்திராவில், 1,395; கர்நாடகாவில், 667;
தமிழகத்தில், 650; கேரளாவில், 598; புதுச்சேரியில், 38 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.தமிழகம், தென் மாநிலங்களில், நான்காம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற, 650 பேரில், 400க்கும் மேற்பட்டோர் சென்னையை
மையமாகக் கொண்டு தேர்வு எழுதிய வெளிமாநிலத்தவர்; மீதமுள்ள, 80 சதவீதம்
பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள்.
தமிழக சமச்சீர் கல்வி மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது
குதிரை கொம்பாகவே உள்ளது. பாடத்திட்டம் மாற்றப்படாமலும்,
புதுப்பிக்கப்படாமலும் இருப்பது, இதற்கு முக்கிய காரணம் என, கல்வியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.எனவே, பாடத்திட்டங்களை மாற்றும் வரை, அரசு பள்ளிகளில்
ஐ.ஐ.டி.,க்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு,
இலவச பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
It is not only about the coaching...serious effort was needed for from class 9 onwards ....and one more thing our syllabus should be reframed for it....because I can say the missing gap from government school children to other children who are preparing from cbse...to get in to IIT ....they have to work hard....even i was from IIT with tn government school that to in tamil medium up to my 12th class ....and also i was coaching for IIT for few years...so in any way if I can help to our tn govt students. Regarding IIT preparation... I feel happy for it....AS i am working as bt asst maths...in tn schools....let us make a good chain work to improve our state....in education....
ReplyDelete