மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பப் பதிவு
புதன்கிழமை முதல் தொடங்கியது. ஜூலை 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள்,
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்
நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படுகிறது.
இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு
வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும்
பங்கேற்றால் போதுமானது. 6ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மட்டும்
ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது.
இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத
வேண்டும்.
செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2
தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும்
நடத்தப்படுகிறது.
தேர்வர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும். தேர்வறை அனுமதிச் சீட்டை ஆகஸ்ட் 17-இல் பதிவிறக்கம் செய்துகொள்ள
வேண்டும்.
கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள்
பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2
ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8-ஆம்
வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2
ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது
பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.600-ம் இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000-ம், எஸ்.சி., எஸ்.டி.,
மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ம், இரண்டு தாள்களையும்
எழுத ரூ.500-ம் செலுத்த வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...