அடுத்த கல்வி ஆண்டுக்கான, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறுவதற்கான காலக்கெடு, வரும், 30ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., வாரியம்
பாடத்திட்ட அங்கீகாரம் வழங்குகிறது.
அடுத்த, 2017 - 18ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான, ஆன் லைன்
பதிவு, இந்த ஆண்டு ஜன., 1ம் தேதி துவங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு,
500க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., இணைப்பு கேட்டு
விண்ணப்பித்து உள்ளன. ஆனால், அவற்றுக்கு தமிழக அரசின் தடையில்லா சான்று
கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆன்
லைன் பதிவுக்கான காலக்கெடு, 30ம் தேதி முடிவதாக, சி.பி.எஸ்.இ.,
அறிவித்துள்ளது. அதற்குள் பள்ளிகள் விண்ணப்பித்தால் மட்டுமே, வரும் கல்வி
ஆண்டில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய முடியும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...