Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BT to PG Promotion Panel-ல் குளறுபடி! - இடர்பாடுகளை களைய BRTE சங்கம் கோரிக்கை




      ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக தகுதி வாரியாக பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் மூத்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது.
       பட்டியல் தயாரிக்கும்போது தகுதியுடையவர்கள் அனைவரின் பெயர்களும் கட்டாயம் பரிந்துரைக்கப்படவேண்டும் எனவும், இல்லாவிட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
           இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் விவரம் தலைமைஆசிரியர்கள் மூலமாக பரிந்துரைக்கப்படுவர். 
                இந்நிலையில்  ஆசிரியர்கள் அனைவரும் 1.6.2016 அன்று தேர்வு நிலை ஊக்க ஊதியம் பெற வாய்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் தேர்வுநிலைக்கு 3% + 3% = 6% ஊதியம் அதிகமாக நிர்ணயிக்கப்படும். அதன் பிறகு பதவி உயர்வில் சென்றால் அதற்கு தனியே 3% என மொத்தம் = 9% அடிப்படை சம்பளம் உயரும். அவற்றிற்கு அகவிலைப்படி போன்ற இதர பணப்பலன்கள் கணக்கிடப்பட்டு ஏறத்தாழ மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உயரக்கூடும். 
              எனவே பதவி உயர்வு பட்டியலுக்கு தகுதி இருந்தும் ஆசிரியர்கள் பலர் "பதவி உயர்வு பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க விரும்பவில்லை" என முறையாக கடிதம் வழங்கினார்கள். இத்தகவல் குறிப்பிட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு அடுத்த 3 வருடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலில் அவர்களின் பெயர் இடம் பெறாமல் நிறுத்தி வைக்கப்படுவார்கள். 
            மேற்படி ஆசிரியர்கள் முறையாக பதவி உயர்வு வேண்டாம் என விடுவிப்பு செய்துள்ள நிலையில், ஒரு சில ஆசிரியர்கள் கடந்த வருடங்களில் (1.1.2013, 1.1.2014 ) பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்று உள்ளார்கள். ஆனால் 1.1.2015 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியலில் தொடர்ந்து பட்டியலில் இடம் பெற தகுதியிருந்தும் அப்பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளாமல் இருந்துள்ளார்கள். காரணம் - 1.6.2016 பதவி உயர்வு பட்டியல்  ஜுன் 2016 க்கு பிறகே வெளியிடப்படும் என்பதால் அப்போது அவர்கள் தேர்வு நிலை முடித்து  6 சதவீத ஊக்க ஊதியமும் பெற்று விடலாம் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே நடைபெறக்கூடிய பதவி உயர்வு பட்டியிலும் இடம்பெற்று அதற்கு தனியே 3 சதவீதம் என மொத்தம் 9 சதவீதம் ஊதிய உயர்வை உடனடியாக பெற்று விடலாம் என கருதுவதே. இவ்வாறு அனைத்து பாடங்களிலும் சேர்த்து ஏறத்தாழ 180க்கும் அதிகமான ஆசிரியர்கள் பெயர்கள் கடந்த வருட பட்டியலுக்கே தகுதியிருந்தும் சேர்க்காமல், இவ்வருட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
           இதனால் முறையாக விடுவிப்பு செய்த ஆசிரியர்கள் ஒரு புறம் வருத்தப்பட்டு உள்ள நிலையில் இக்குளறுபடியால் இவ்வருடம் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று பதவி உயர்வு பெற வேண்டிய ஆசிரியர்கள் பலரின் பெயர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்த நிலையில் உள்ள இவர்கள் பதவி உயர் பெற ஏறத்தாழ நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
              எனவே பதவி உயர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள மேற்படி குழப்பத்தை களையுமாறும், கடந்த பதவி உயர்வு பட்டியலுக்கே தகுதி இருந்தும்  பெயரை சேர்க்காமல், இவ்வருட பட்டியலில் பெயரை சேர்த்துள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்(ARGTA)மாநில பொதுச் செயலாளர் தா.வாசுதேவன் தலைமையில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா, பள்ளிக்கல்வி இயக்குனர் போன்றோரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்கள்.

.





















3 Comments:

  1. பூனைக்கு மணி கட்டிய ARGTA வாழ்க

    ReplyDelete
  2. Yes the teachers who had been made such malpractice and the HM's responsible for such fraudulent acts must be punished without any delay but the deserved teachers must be promoted forthwith.Is the department act genuinely and worthfully????

    ReplyDelete
  3. படித்தவர்களுக்குத்தான் இப்படி குறுக்குப்புத்தி வேலை செய்யும். படித்தவன் பாவம் செய்தால் போவான், போவான் அய்யோ என்று போவான் - பாரதியார்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive