அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசிடம் வலியுறுத்தப்படும் என்று எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கூறினார்.
பொதட்டூர்ப்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர்
பி.எம்.நரசிம்மன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கிடும் நோக்கில் முதல்வர்
ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். இதனால் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக
தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விரைவில் இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாவட்டத்தில்
உள்ள பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திபிரியா சுரேஷ்,
இ.எம்.எஸ்.நடராஜன், ஊராட்சித் தலைவர் கிருஷ்ணம நாயுடு உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...