பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கில இலக்கிய
படிப்புக்கும் மாணவியரிடம் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுஉள்ளன.
கல்லுாரிகளில் உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவம்
மற்றும் இன்ஜி., படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவங்கவில்லை. அதேநேரம்,
இன்ஜி., படிப்பை போல், கலை, அறிவியல் பாடங்களுக்கும் கடும் போட்டி
ஏற்பட்டுள்ளது.
இன்ஜி.,க்கு செல்ல விரும்புவோரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில்,
பட்டப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.20 மடங்குஅதனால், இரண்டாம் கட்ட
மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பி.காம்., மற்றும் 'கம்பெனி செக்ரட்ரிஷிப்'
படிப்புக்கு கடும் போட்டி உள்ளது.
ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒதுக்கப்பட்ட இடங்களை விட, 20 மடங்கு அளவுக்கு
கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. சென்னையில், ராணி மேரி, காயிதே மில்லத்,
பாரதி போன்ற மகளிர் அரசு கல்லுாரிகளிலும், எத்திராஜ், கிறிஸ்தவ கல்லுாரி,
செல்லம்மாள் போன்ற தனியார் மகளிர் கல்லுாரிகளிலும், பி.காம்., '
சீட்'டுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி, விவேகானந்தா, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை,
அறிவியல் கல்லுாரி, மாநில கல்லுாரி, நந்தனம் கலை கல்லுாரி போன்றவற்றிலும்,
பி.காம்., படிப்புக்கு அதிக
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதேபோல், கணிதம் மற்றும் அறிவியல் படித்த
மாணவி யரிடையே,கம்ப்யூ., சயின்ஸ் மற்றும் ஆங்கில மொழி படிப்புக்கு அதிக
போட்டி உள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, 'மாணவியருக்கு
ஆசிரியர் பணி, 'டியூஷன்' எடுப்பது, அலுவலக பணி, பேராசிரியர் பணியில்
சேர்தல் போன்ற பணிகளில் சேரவே, அதிகம் விரும்புகின்றனர். அதனால், ஆங்கிலம்,
கம்ப்யூ., சயின்ஸ் படிப்புகளில்சேர விரும்பு கின்றனர்' என்றனர்.
அறிவியல் பிரிவில் மீண்டும், இயற்பியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
பிரிவுக்கு, மாணவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால், ஒரு சீட்டுக்கு
ஒரே நேரத்தில் பலர் மோதுகின்றனர்.
வெளியேறுவர் அரசு கல்லுாரிகளில் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை
பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி, முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இன்னும் இடம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு, அரசியல் அறிவியல், வேதியியல்,
மனை அறிவியல், ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல், சமூகவியல் போன்ற
பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் இன்ஜி., கவுன்சிலிங் முடியும் போது, பலர் கலை, அறிவியல்
படிப்புகளில் இருந்து வெளியேறுவர். அப்போது காலியாகும் இடத்தில், வேறு
பாடப்பிரிவில் அமர்த்தப்பட் டோர் நியமிக்கப்படுவர் என , கல்லுாரி
முதல்வர்கள் தெரிவித்தனர்.
குவிந்த விண்ணப்பங்கள்: * சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லுாரியில்,
பி.காம்., படிப்பில், 210 இடங்களுக்கு, 3,500 பேர்; பி.காம்., கம்பெனி
செக்ரட்ரிஷிப்பில், 70 இடங்களுக்கு, 1,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.எஸ்சி., கணிதம், 140 இடங்கள்; கணினி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல்
போன்ற படிப்புகளில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தலா, 40 இடங்களுக்கு,
700 - 900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
* ராணி மேரி மகளிர் கல்லுாரியில், 150 பி.காம்., இடங்களுக்கு, 3,000 பேர்;
பொருளாதாரவியலில், 70 இடங்களுக்கு, 600 பேர்; கணிதம், அறிவியல், கணினி
அறிவியல், ஆங்கிலம், படிக்க, தலா,
600 - 800 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இந்த கல்லுாரியில், மொத்தம், 16
ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
* வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லுாரியில், பி.காம்., படிப்பில், 140
இடங்களுக்கு, 750 பேர், பி.எஸ்சி., இயற்பியல், தாவர உயிரியல்,
'அட்வான்ஸ்ட்'
விலங்கியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவு களுக்கு, 320 இடங்களுக்கு, 1,000
பேர் என, மொத்தம், 2,000 பேருக்கு மேல் விண்ணப்பித் துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...