சிவகங்கை : சத்துணவு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு
நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல
கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் சத்துணவு ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து
ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த தொகை ஏற்கனவே ஓய்வூதியம் பெறும்
ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
ஒரு சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை.
அதேபோல் கூடுதல் பொறுப்பு கவனிக்கும் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும்
ரூ.500ஐ 2010 க்கு பின் வழங்கவில்லை. மேலும் பல மாவட்டங்களில் சமையலர்,
உதவியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு தரவில்லை. இதை கண்டித்து சத்துணவு
ஊழியர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
ஊழியர்கள் கூறுகையில், 'ஓய்வூதிய உயர்வுக்கு பிப்ரவரியில் அரசாணை
வெளியிடப்பட்டது. ௪ மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை. போராட்டம்
நடத்துவதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...