இந்த ஆண்டு கலைக் கல்லூரிகளில் எந்தப் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறித்த ஸ்பாட் ரிப்போர்ட்...
கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் களைகட்டி வருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் இல்லாத அறிவியல் பாட மாணவர்களுக்கும், பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல், கலைப்புலப் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் கலைக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதனால், கலைக் கல்லூரிகளில் சேர எங்கு பார்த்தாலும் கூட்டம். அதுவும் பிரபல கலை, அறிவியல் கல்லூரிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்தக் கல்லூரியில் விரும்பிய பாடத்தில் ரெகுலர் வகுப்பில் இடம் கிடைக்காவிட்டாலும்கூட, மாலை நேர வகுப்பிலாவது இடம் கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். அல்லது வேறு ஏதாவது பாடப்பிரிவில் இடம் கிடைத்தால் கூட போதும், என்று பிரபல கல்லூரியை கை நழுவவிட்டு விட விரும்பாத மாணவர்களும் இருக்கிறார்கள்.

பி.காம்., விஸ்காம், பிபிஏ, பிஏ ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் பி.காம். மோகம் தொடர்கிறது. சிஏ, ஏசிஎஸ், காஸ்ட் அக்கவுண்டிங் போன்ற தொழில் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் சாய்ஸ் பிகாம்.தான். இதனால், பிரபல கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
1970-களில் இருந்துதான் வங்கி வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் பிரபலம் அடையத் தொடங்கின.அன்று பி.காம் படித்தால் போதும், வங்கியில் வேலை கிடைத்துவிடும் என்ற மன நிலை இருந்தது. அன்று ஆரம்பித்த இந்த பி.காம். மோகம் இன்று வரை குறையவில்லை.இன்று வங்கிப் பணிகள் மட்டுமன்றி கணக்கு தணிக்கை, பங்குச் சந்தை, ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு, அலுவலக நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிதித்துறை சார்ந்த பணிகளில் பிகாம் படித்தவர்களுக்கே அதிக முன்னுரிமை தரப்படுகிறது" என்கிறார் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.
எங்கள் கல்லூரியைப் பொருத்தவரையில் கடந்த 25 ஆண்டு காலமாக பி.காம் படிப்புகளுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. வங்கித் துறை, நிதித்துறைகளில் பெருகி வரும் வேலைவாய்ப்புகளும் இதற்குக் காரணம். எங்கள் கல்லூரியில், பிளஸ் டூ தேர்வில் குறைந்த பட்சம்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...