மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும் மூடிவிடக் கூடாது
என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி
இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளில்
மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலோ அல்லது மாணவர் சேர்க்கையே இல்லை என்றாலோ
அந்தப் பாடப் பிரிவை கல்லூரிகள் மூடிவிடக் கூடாது.
கல்லூரியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ஏழை மாணவர்களை அந்தப் பாடப்
பிரிவுகளில் சேர்க்க கல்லூரி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பாடப்
பிரிவை மூடும் நிலை ஏற்பட்டால், அதற்கான உரிய காரணத்தைத் தெரிவிப்பதோடு,
அந்த பாடப் பிரிவில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிப்
பாதுகாப்புக்கு கல்லூரி செயலரும், முதல்வரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அத்துடன், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் ஆய்வுக்குப் பிறகு அரசின்
ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...