வங்கிகளில் புரோபேஷனரி ஆபிஸர்(பிஓ) பணியிடங்களுக்கான தேர்வுக்குத் தயாராக ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகின்றன
. வங்கிகளில் புரோபேஷனரில் ஆபீஸர் பணியிடங்களுக்கான தேர்வை தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் பர்சனல் செலக்ஷன்(ஐபிபிஎஸ்) நடத்துகிறது. நாட்டிலுள்ள21தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இந்தத்தேர்வை ஐபிபிஎஸ் நடத்தி வருகிறது.
வங்கிகளில் பிஓ பணியிடங்களுக்கு காலியிடங்கள் ஏற்படும்போது ஐபிபிஎஸ் இந்தத் தேர்வை நடத்தும். இதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு,குழுவிவாதம் ஆகியவற்றை நடத்தி ஆட்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் தேர்வு செய்யும்.பிஓ என்பவர் யார்... பிஓ என்பவர் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்படும் இளநிலை அதிகாரி ஆவார். இவர் குறைந்தது2ஆண்டு காலம் புரோபேஷனரி ஆபீஸராக இருப்பார். இதைத் தொடர்ந்து அவர் உதவி மேலாளராக பணிஉயர்வு செய்யப்படுவார். பிஓ வேலைகள் வங்கியின் பல்வேறு பிரிு வேலைகளுக்கும் அவர் அழைக்கப்படுவார். வங்கியின் மூத்த மேலாளர் உத்தரவின் பேரில் அவர் பணிகளைச் செய்வார்.
பொது வங்கி,வங்கி நிர்வாகம் உள்ளி்ட்ட பிரிவுகளை அவர் கையாள்வார். வாடிக்கையாளர் சேவை,புதியகணக்கு தொடங்குதல்,ஏடிஎம் கார்ட்டுகள்,வங்கிக் கடன்,செக் புத்தகம்,வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர்தெரிந்து வைத்திருத்தல் அவசியம். வங்கியின் மாத இலக்கை அடைதல்,இருப்புத் தொகை,கடன் தொகையை அடைதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் கையாண்டாக வேண்டும். வங்கியின் வணிகத்தை அதிகரித்தல்,புதியவாடிக்கையாளர்களைக் கொண்டு வருதல்,பிக்ஸிட் டெபாசிட்டுகளை கையாளுதல்,இன்சூரன்ஸ் பாலிசி,கிரெடிட் கார்டு,மியூச்சுவல் பண்டுகளை கையாளுதல் போன்ற பணிகளையும் செய்யவேண்டும். அலுவலகத் தொடர்பு வங்கிக்கு வரும் அலுவலக இமெயில்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பும் பிஓஅதிகாரியையே சேரும். அவரது சம்பளம் ரூ.14,500 -25,700என்ற விகிதத்தில்இருக்கும். அலவன்ஸ்கள் உள்ளிட்டவை சேர்த்து ரூ.31,000 -ரூ32,000என்ற விகிதத்தில் சம்பளம்அவருக்குக் கிடைக்கும். எனவே வேலை தேடுவோர் பிஓ பணியிட அறிவிப்பு வந்தால் அதைத் தவற விட வேண்டாம். உடனடியாக அப்பணிக்கு விண்ணப்பித்து வெற்றி பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...