காது கேளாத, உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி சி.டி.ஐ. வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை தொழிற்கல்வி மறுவாழ்வு மையம் சார்பில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், 18 வயது முதல் 35 வயது வரையிலானோர் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை தங்களுடைய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் காலை 9.30 மணிக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநரை 044-22501534, 95007 05061, 96772 44065, 94441 13092 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...