ஆளுநர் உரை மீதான விவாதத்தில்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு நிர்வாகத்தில்
வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி குறுக்கிட்டு
கூறியது: மு.க.ஸ்டாலின் வெளிப்படைத் தன்மை நிர்வாகத்தைப் பற்றி
பேசுகிறார். ஆசிரியர் இடமாற்றத்துக்குக் கலந்தாய்வு முறையை முதலில் கொண்டு
வந்ததே அதிமுக அரசுதான். கலந்தாய்வு நடத்துவதற்கான ஆய்வை நடத்தி வருகிறோம்.
விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படும்.
துரைமுருகன்: பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வருகின்றனர். இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
அமைச்சர் வீரமணி: இப்போதுதான் அரசு புதிதாக
பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் புதியவர். கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு
நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...