தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை யின் கீழ், எம்.எஸ்., -
எம்.டி., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிய
டாக்டர்களில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
சென்னையில், கடந்த ஆண்டு
இறுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, மீட்பு மற்றும் சிகிச்சை பணியில்
ஈடுபட்டதே, தேர்வில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என, டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர்
ரவீந்தரநாத் கூறியதாவது:வெள்ள பாதிப்பின்போது, அரசு டாக்டர்கள் அனைவரும்,
மீட்பு மற்றும் தொற்று பாதிப்பு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதில்,
முதுநிலை மருத்துவம் படித்தோர், பாடப் புத்தகத்தைக் கூட எடுக்க நேரமில்லை.
இதனால், 'எம்.ஜி.ஆர்., பல்கலை தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்' என,
வலியுறுத்தினோம். ஆனால், அதை ஏற்காமல் தேர்வுகள் நடத்தப்பட்டன.தற்போது,
தோல்வியடைந்தோரில் பெரும்பாலானோர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்
டாக்டர்கள். பல்கலைகளில் உள்ள நடைமுறைப்படி, தோல்வி அடைந்தோருக்கு,
இரண்டாம் மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர்., பல்கலை அவ்வாறு
செய்யவில்லை. எனவே, தமிழக அரசு மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலை சொல்வது என்ன?
எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கூறியதாவது:முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வில், 1,397 பேர் பங்கேற்றனர்; 1,286 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில்,95 சதவீத தேர்ச்சி என்றாலும், 90 சதவீதத்திற்கு மேலான தேர்ச்சி வழக்கமானது தான். தோல்விக்கு வெள்ள பாதிப்பு காரணம் எனக் கூற முடியாது.இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிப்படியே, விடைத்தாள் திருத்தம் நடக்கிறது. முதல் திருத்தத்தில் தோல்வி அடைந்தோரின் விடைத்தாள், இரண்டாம் திருத்தம் செய்யப்பட்டு தான் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது இறுதியானது; மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...