கேபிள் 'டிவி' மூலம் 'இன்டர்நெட்' வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படாததால் குறைந்த வாடிக்கையாளர்களோடு முடங்கியது.
அரசு கேபிள் டிவி நிறுவனம் குறைந்த கட்டணத்தில் 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும்என பிப்ரவரியில் அரசு அறிவித்தது.
இதற்காக 2 எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில் ஆம்பல், மகிழம், முல்லை, குறிஞ்சி ஆகிய 4 திட்டங்களும், 4 எம்.பி.பி.எஸ்.,பதிவிறக்க வேகத்தில் வாகை, செங்காந்தள் ஆகிய 2 திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.ஆம்பல் திட்டத்தில் மாதத்திற்கு 2 ஜி.பி., பதிவிறக்கம் செய்யலாம். கட்டணம் ரூ.299. மகிழத்தில் 5 ஜி.பி.,க்கு ரூ.499, முல்லையில் 10 ஜி.பி.,க்கு ரூ.549, குறிஞ்சியில் 20 ஜி.பி.,க்கு ரூ.649, வாகையில் 20 ஜி.பி.,க்கு ரூ.799, செங்காந்தளில் 40 ஜி.பி.,க்கு ரூ.899 வசூலிக்கப்படும். மேலும்ஆம்பலை தவிர மற்ற திட்டங்களில் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பதிவிறக்கம் செய்தால் 5 ஜி.பி.,க்கு ரூ.99, பத்து ஜி.பி.,க்கு ரூ.149 வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.முதற் கட்டமாக சிறிய மாவட்டங்களில் 10 இணைப்புகளும், பெரிய மாவட்டங்களில் 25 இணைப்புகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து செயல்படாததால் குறைந்த வாடிக்கையாளர்களோடு திட்டம் முடங்கியது.கேபிள் 'டிவி' அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தேர்தல் நேரம் என்பதால் குறைவான 'இன்டர்நெட்' இணைப்புகளே கொடுக்கப்பட்டன. இணைப்பு பெற்றவர்கள் நன்றாக உள்ளதாக கூறியுள்ளனர். புதிய இணைப்பு கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...