காயம் பட்ட உடனேயே நாம் செய்ய வேண்டியது ரத்தப் போக்கை நிறுத்துவது. கை, கால்களில் காயம் பட்டால் நாமே காயம் பட்ட இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தி, ரத்தப் போக்கை நிறுத்திவிடலாம்.
அது கூட சிறிய காயத்துக்குத்தான்.
வேறு யாரும் இல்லாத சமயத்தில் இடுப்பின் பின்புறம், அக்குள் போன்ற இடங்களில் காயம் பட்டால் பிறர் உதவியில்லாமல், ரத்தப் போக்கை எப்படித் தடுத்து நிறுத்துவது?
ரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்த உதவும் வகையில் வந்திருக்கிறது ஒரு கருவி. லநபஅப 30 எனப்படும் இந்தக் கருவி ஒரு ஸிரிஞ்ச் வடிவில் உள்ளது. மாத்திரை வடிவிலான கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஸ்பாஞ்ச் இந்த ஸிரிஞ்ச்சுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
காயம் பட்ட இடத்துக்கு அருகே இந்த ஸிரிஞ்ச்சை அழுத்தினால், அதிலிருந்து மாத்திரை வடிவிலான ஸ்பாஞ்ச் வெளியே வந்து காயத்தில் ஒட்டிக் கொள்ளும். காயத்தின் அளவுக்கு ஏற்ப, வருகின்ற ரத்த அளவுக்கேற்ப இந்த ஸ்பாஞ்ச் பெரிதாகிக் கொண்டே போகும். சில விநாடிகளில் ரத்தப் போக்கு நின்றுவிடும்.
சண்டை செய்யும் ராணுவ வீரர்கள் காயம் அடையும்போது, பயன்படுத்தப்பட்ட இந்தக் கருவி, இப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வந்திருக்கிறது. இந்தக் கருவிக்குள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட மாத்திரை வடிவிலான 92 ஸ்பாஞ்ச்களை வைக்க முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...