அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர்
மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற
வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
யு.ஜி.சி., சார்பில், அதன் இணை செயலர் கே.பி.சிங், அனைத்து பல்கலைகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:அனைத்து பல்கலைகள் மற்றும்
கல்லுாரிகளிலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை நடத்தும்
போது, இடஒதுக்கீடு முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்;
விதிமீறல்கள் இருக்கக் கூடாது.
அதேபோல், பேராசிரியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனங்களிலும், அதேபோன்ற
விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் இனத்தவருக்கு, 15
சதவீதம்; பழங்குடியினருக்கு, 7 சதவீதம்; மற்ற பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு, 27 சதவீதம் என்ற இடஒதுக்கீடு கொள்கையை, கட்டாயம் கடைபிடிக்க
வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...