உலக தமிழாசிரியர் மாநாடு சென்னையில் இன்று துவங்குகிறது.தமிழ்நாடு தொடக்கப்
பள்ளிஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளர் ஜோசப்சேவியர் கூறியதாவது:
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, உலக தமிழாசிரியர் பேரவை இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகத் தமிழாசிரியர் மாநாட்டை நடத்துகின்றன. 10 வது உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. 11 வது மாநாடு சென்னையில் ஜூன் 10 (இன்று) முதல் ஜூன் 12 வரை நடக்கிறது.
தமிழகத்தில் இருந்து 400 தொடக்க, நடுநிலைப்பள்ளிஆசிரியர்கள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், கனடா, இங்கிலாந்தில் இருந்து 100 தமிழாசிரியர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் உதயச்சந்திரன் துவங்கி வைக்கிறார்.தமிழில் கற்றல், கற்பித்தலில் மேற்கொள்ளப்படும் சிறந்தநுணுக்கங்கள், கற்பித்தல் தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. தமிழ் கற்பிக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை களைவது குறித்து விவாதிக்கப்படும், என்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், பெரியசாமி, மாவட்டத் தலைவர் ராமராஜ், பொருளாளர் அருள் உடனிருந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...