அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டப்
படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்
செய்யப்படுகின்றன.அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு மற்றும் வேலுாரில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன.
இவற்றில், ஒருங்கிணைந்த,
பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்பில் மாணவர்
சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.இந்த கல்லுாரிகளில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி.,
ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி.,
மூன்றாண்டு படிப்புக்கு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர்
சட்ட பல்கலையிலும், நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு,
ஜூலை 15க்குள் வழங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...