ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை
சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும்
பணி சார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 2015
நவ., 19ம் தேதி, ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம்
அளித்தது.
இக்குழுவின் பரிந்துரையில், 21 ஆயிரம் முதல், 2.7 லட்சம் ரூபாய் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு, 3,000 ரூபாய் அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவர்.நாளை இந்த பரிந்துரைகளை இறுதி செய்வதற்காக, அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...