Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


ரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுப்பாராவ் அண்மையில் வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குரியனப்பள்ளி கிளை அஞ்சலகத்தின் அஞ்சல் அலுவலர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி ஆகும். இந்த பதவி பொது வகுப்பினருக்கானது. விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 30 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு 5 ஆண்டுகளும் தளர்த்தப்படும்.
 குரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 6-ஆம் தேதியாகும். விண்ணப்பங்களை அருகிலுள்ள துணை அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது கிருஷ்ணகிரி கோட்ட அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கும் அருகில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது 04343-230522, 230523 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive