அண்ணா பல்கலையில், பொறியியல் மாணவர்
சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டில்,
இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர்
சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள், இப்பிரிவுகள்
உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்தனர்.அண்ணா பல்கலை
இணைப்புக்கு உட்பட்ட, 524 பொறியியல் கல்லுாரிகளில், 1.92 லட்சம்
இடங்களுக்கு, ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 1.31 லட்சம் பேர், கவுன்சிலிங்கில்
பங்கேற்க தகுதி பெற்றுள்ள நிலையில், இம்மாதம், 24ம் தேதி விளையாட்டு
பிரிவுக்கும், 26ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங்
நடந்தது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், சென்னையில் நேற்று துவங்கியது. முதல் தர மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டுஆணையை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். கவுன்சிலிங்கில் பங்கேற்ற முதல் தர மாணவர்களில், முதலிடம் பெற்ற அபூர்வ தர்ஷினி, அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரியில், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் என்ற, இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தார்.அவரை அடுத்து வந்தவர்களில் நான்கு பேர், இ.சி.இ., பிரிவையே தேர்வு செய்தனர். ஒரு மாணவி உட்பட மூன்று பேர், மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தனர்.
கம்ப்யூட்டர்
சயின்ஸ் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவை, தலா ஒருவரும்
தேர்வு செய்தனர்.முதல் நாளில் பங்கேற்றவர்களில், இ.சி.இ., கிடைக்காத
மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்தனர். 'ரேங்க்'
பட்டியலில் முன்னணியில் இருந்த மாணவர்கள், பெரும்பாலும் கணினி சார்ந்த
பிரிவுகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர்.அதேபோல, ரேங்க் பட்டியலில் உள்ள
முதல், 10 மாணவர்களில் எட்டு பேர், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள, கிண்டி
இன்ஜி., கல்லுாரியை தேர்வு செய்தனர். மீதியுள்ளவர்களில் ஒருவர், கோவை
பி.எஸ்.ஜி., கல்லுாரியையும், இன்னொருவர், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி.,
கல்லுாரியையும் தேர்வு செய்தனர்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், சென்னையில் நேற்று துவங்கியது. முதல் தர மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டுஆணையை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். கவுன்சிலிங்கில் பங்கேற்ற முதல் தர மாணவர்களில், முதலிடம் பெற்ற அபூர்வ தர்ஷினி, அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரியில், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் என்ற, இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தார்.அவரை அடுத்து வந்தவர்களில் நான்கு பேர், இ.சி.இ., பிரிவையே தேர்வு செய்தனர். ஒரு மாணவி உட்பட மூன்று பேர், மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தனர்.
இ.சி.இ., பாடப்பிரிவை தேர்வு செய்தது குறித்து, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறும் போது, 'இ.சி.இ., படித்த பலர், சாப்ட்வேர் நிறுவனங்களில் சேர்ந்து அதிக சம்பளம் பெறுகின்றனர்; வெளிநாடுகளிலும்வேலைவாய்ப்பு அதிகம்' என்றனர்.அதேபோல், கல்லுாரிகளில் நடக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' முகாம்களில், கணினி சார்ந்த ஐ.டி., நிறுவனங்களே, அதிக அளவிலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதனால், இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு அதிக மவுசு உருவாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...