மதுரை காமராஜ் பல்கலை நேரடி மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பான
விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.
முதற்கட்டமாக, பல்கலை அதிகாரி உட்பட 6
பேருக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.இப்பல்கலை
தொலைநிலைக் கல்வி 2014- 15ம் ஆண்டில் 1916 மாணவர்கள் நேரடி சேர்க்கையில்
சேர்ந்து தேர்வு எழுதினர்.
இதில் பெரும்பாலான மாணவர்கள் போலி சான்றிதழ் சமர்ப்பித்தனர்.அதற்காக தொலைநிலைக் கல்வி மையங்களுக்கும், பல்கலை முக்கிய நபர்களுக்கும் ரூ.பல லட்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்தது.இதனால் ஒரு ஆண்டை கடந்தும், தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் நியாயமான முறையில்சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அவர்கள் மேல்படிப்பு, பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை மானியக்குழு, உயர்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. மாணவர் சேர்க்கை குறித்து, சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.தற்போது அக்குழு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக தொலைநிலைக் கல்வி இயக்கக அதிகாரி, பல்கலை அலுவலர்கள் உட்பட 6 பேருக்கு, 'எந்த அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன' என்பது குறித்து விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், 'இம்முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது. சிலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முறைகேடு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க செயலருக்கு பரிந்துரைக்கப்படும்' என்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...