பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச
பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை வழங்கும் திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
நடப்பு கல்வியாண்டில், பள்ளி துவங்கும்
முதல் நாளிலேயே, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 90 லட்சம்
மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள்; 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை
படிக்கும், 77 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்; 1ம்
வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு,
இலவச சீருடைகள் போன்றவற்றை வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டங்களை துவக்கி வைப்பதற்கு
அடையாளமாக, தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா, ஐந்து மாணவ,
மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும்
சீருடைகளை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பெஞ்சமின்,
தலைமைச் செயலர் ஞானதேசிகன், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா
மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...