அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருவதற்கு தடை
விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல்
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட்
அணிந்து வரவும், அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை
பயன்படுத்துவதற்கும் தடைவிதித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்
சவுகான்.
மேலும், ஆட்சியர் அலுவலகம் என்பது சாதாரண இடம் இல்லை; அதற்கென உள்ள விதிமுறைகளை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்துக்கு வரும்போது கண்ணியமான உடைகளை அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளார்.ஊழியர்கள் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை மூத்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதே சமயம் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...