Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குளறுபடி: இன்ஜி., கவுன்சிலிங் விளக்கம் அளிக்க யாரும் இல்லை

          இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, அண்ணா பல்கலை அறிவித்த தொலைபேசி எண்கள், ஒரு மாதமாகவே செயல்படாததால், விண்ணப்பதாரர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலை மூலம், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பல வகையிலும் பாராட்டை பெற்ற இந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு பல குழப்பங்களை சந்தித்து வருகிறது. 


இந்த ஆண்டு கவுன்சிலிங் நடத்த, பேராசிரியை இந்துமதியை அரசு நியமித்தது. அத்துடன், 'ஆன்லைன்' விண்ணப்ப முறையை, எந்த வித ஒத்திகையுமின்றி நேரடியாக, அண்ணா ,பல்கலை அறிமுகம் செய்தது. ஏப்., 15ல் ஆன்லைன் விண்ணப்பம் இருந்தாலும்விண்ணப்ப கட்டணத் துக்காக, டி.டி., எடுக்கஅறிவுறுத்தப்பட்டது. அதனால், மாணவர்கள் வங்கிகளில் காத்துக் கிடந்து, டி.டி., எடுத்தனர். டி.டி., கமிஷனாக கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதிலும், பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் பணம் செலுத்தியும், அது அண்ணா பல்கலையின் இன்ஜி., பிரிவில் பதிவு செய்யப்படவில்லை. அதனால், ஏற்கனவே பணம் செலுத்தினாலும், மீண்டும் பணம் செலுத்தி, விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.

விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ள, பலர் அண்ணா பல்கலைக்கு நேரிலும், போனிலும்தொடர்பு கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை.

செயல்படாத தொலைபேசி: உதாரணமாக, 'கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, 044 -- 2235 8041, 2235 8042, 2235 8043, 2235 8044 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், இந்த போன் எண்களை தொடர்பு கொண்டால், 'உபயோகத்தில் உள்ளது; பின்னர் அழைக்கவும்' என்ற ஒலி எப்போதும்கேட்கிறது என, பெற்றோர், மாணவர் புகார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து விசாரித்த போது, குறைகளை கேட்க போதிய ஆட்கள் இல்லாததால், குறை கேட்பு பணியில் நியமிக்கப்பட்ட சிலர், போன் ரிசீவரை எடுத்து கீழே வைத்து விட்டு, வேறு பணிகளை கவனிப்பதாக தெரியவந்தது. 

இதேபோல், tneaenq2016@annauniv.edu என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு ஆயிரக்கணக்கானோர் மெயில் அனுப்பியுள்ளனர். அவற்றுக்கும், எந்த பதிலும் இல்லை என, பெற்றோர் புகார் தெரிவித் துள்ளனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive