Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு: சட்டப்படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்

     கோவை தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
 
            தமிழகத்தில் ஒரு காலத்தில், சட்டத்துறை மீதான எதிர்மறை எண்ணங்களும், சட்டப் பிரிவுகள் தொடர்பான பாடத் திட்டம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங் களால் இத்துறையைத் தேர்வு செய் பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது.

மேலும், உயர் கல்விக்கு முயற் சிக்கும் மாணவர்கள் பலரும் கலைப் பிரிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சட்டப் படிப் புக்கு கொடுக்காத நிலை இருந் தது. ஆனால், கடந்த 2 வருடங் களாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக கோவைசட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக் கின்றனர்.அரசியல் துறைக்குச் செல்ல நினைப்பவர்கள், நிலையான வேலைவாய்ப்பைப் பெற விரும்பு பவர்கள், சட்டத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் என சட்டப் படிப் பைத் தேடி வருபவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு நம்பிக்கையே அதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.கோவை அரசு சட்டக் கல் லூரி முதல்வர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு வருடங்களாக சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது.

சட்டத்துறை மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இதற்கு காரணம். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக் கும் என கூறக்கூடிய பி.இ, பி.டெக். படித்த மாணவர்கள் அதிக அளவில் சட்டம் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எல்.எல்.பி. துறையில் பி.இ, பி.டெக். முடித்த பட்டதாரிகள் 30 பேரும், இரண்டாம் ஆண்டில் 15 பேரும் படிக்கிறார்கள்.சட்டப்படிப்பை முடித்தால், குறைந்தபட்ச வருமானம் தரும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு முன்பு வரை, உதவி அரசு வழக் கறிஞர், உரிமையியல் நீதிபதி, மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பதவி களுக்கு 3 வருடம் பயிற்சி எடுத்து, தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது இளநிலை சட்டம் முடித்தாலே அந்தத் தேர்வுகளை எழுதலாம் என்ற நிலை வந்துவிட்டது.

8 வருடங்களுக்கு முன்பு வரை, சட்டம் படித்து முடித்து, மூத்த வழக்கறிஞர்களிடம் வருடக்கணக் கில் பயிற்சி எடுத்து அதன் பிறகே வழக்கறிஞர்களாக முடியும் என்ற சூழல்இருந்தது. ஆனால் தற்போது, படிப்பை முடித்தவுடனேயே, சிறிது காலம் பயிற்சி எடுத்துவிட்டு பெரிய வழக்குகளையும் இளைஞர்கள் நம்பிக்கையுடன் கையில் எடுக்கி றார்கள். அதேபோல், அவர்கள் தீர்ப் புகளைத் தேடி அலைய வேண்டி யதில்லை. இணைய அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு போன்றவை சட்டத் துறையில் சாதிப்பதை எளிமைப்படுத்திவிட்டது.சமூகத்தில் நல்ல அங்கீகாரத் தையும், அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பையும் சட்டத்துறை வழங்குகிறது என்ற கருத்தும் உள்ளது. ஆகவே வேறு துறை களில் படித்து பட்டம் பெற்றவர் களும் சட்டம் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.பொறியியல் உள்ளிட்ட பாடங் களைப் படித்துவிட்டு வருபவர் களுக்கு, தொடக்கத்தில் சட்டத்தின் பிரிவுகள் குழப்பமாக இருக்கும். அதிகபட்சமாக 6 மாதத்தில் அவர் களுக்கு ஆர்வம் ஏற்பட்டு நன்றாக தேறிவிடுகிறார்கள்” என்றார்.

சேர்க்கை அதிகரிக்கப்படுமா?

தமிழகத்தில் 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பு 7 அரசு சட்டக் கல்லூரி களிலும், 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்பு 6 அரசுசட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக எல்.எல்.பி படிப்புக்கு 1,262 இடங்களுக்கும், பி.ஏ.எல்.எல்.பி படிப்புக்கு 1,052 இடங்களுக்கும் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சட்டப்படிப்பு மீதான ஆர் வமும், விழிப்புணர்வும்அதிகரித் திருப்பதால் அரசு சட்டக் கல்லூரி களில் சேர்க்கை இடங்களை அதிகப்படுத்த வேண்டுமென பெற் றோர்கள் வலியுறுத்துகின்றனர்.




2 Comments:

  1. Law college admission ought to be limit and the same is useful . As well as the qualification should be described such as arts nd science graduated can apply this cource for BGL course nd who all are completed any professional degree , they are not eligible to continue the law course.

    ReplyDelete
  2. Law college admission ought to be limit and the same is useful . As well as the qualification should be described such as arts nd science graduated can apply this cource for BGL course nd who all are completed any professional degree , they are not eligible to continue the law course.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive